முகப்புகோலிவுட்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் தொடர் 'குயின்’ டீசர் வெளியானது..!

  | December 02, 2019 11:37 IST
Jayalalitha

துனுக்குகள்

 • குயின் வெப் சீரீஸை கௌதம் மேனன் இயக்குகிறார்.
 • இதில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
 • பிரசாத் முருகேசன் இதின் சில எபிசோடுகளை இயக்குகிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்' எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் டீஸர் வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வலைதள தொடர் ‘குயின்'. இத்தொடரில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம். ஜி. ராமச்சந்திரனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.எல். விஜய், பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் பலர் ஜெயலலிதாவின் சுயசரிதத்தை திரைப்படமாக்க முன்வந்தனர். இருப்பினும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை வெப் சீரிஸாக இயக்க முடிவெடுத்தார்.

இந்த வெப் சீரிஸின் சில எபிசோடுகளை ‘கிடாரி' திரைப்பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்எக்ஸ் பிளேயர் நிறுவனம் தயாரிக்கும் இத்தொடரின் தலைப்புடனான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.
 
இந்நிலையில், குயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புடன் இப்படத்தின் 26 நொடிகள் கொண்ட டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. எம்.எக்ஸ் பிளேயர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, சினிமாவின் சூப்பர் ஸ்டார் கதாநாயகி, இளம் முதலமைச்சர். ஒரு மகாராணியின் கதையின் பரபரப்பான பக்கங்கள் உங்களுக்காகவே” எனக் பதிவுடப்பட்டுள்ளது. மேலும், இந்த டீசரின் இறுதியில் இத்தொடரின் ட்ரெய்லர் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com