முகப்புகோலிவுட்

சமந்தா நடிக்கும் ‘96’ தெலுங்கு ரீமேக் டீஸர் வெளியானது..!

  | January 10, 2020 16:47 IST
Jaanu

துனுக்குகள்

  • ‘ஜானு’ திரைப்படம் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்காகும்.
  • இப்படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.
  • இப்படத்தை சி. பிரேம் குமார் எழுதி இயக்கியுள்ளார்.
சமந்தா - ஷர்வானந்த் இணைந்து நடிக்கும் ‘ஜானு' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இனைந்து நடித்து கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘96'.ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. குறிப்பாக 90's கிட்ஸ்க்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது.

அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துவருகிறார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ‘எங்கேயும் எப்போதும்' படப் புகழ் ஷர்வானந்த் நடிக்கிறார். அதேபோல், த்ரிஷாவின் ‘ஜானு' கதாப்பாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.
இப்படத்துக்கு தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்தா தெலுங்கு ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார். தமிழில் படம் மட்டுமல்லாது, இசையும் வேர லெவல் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி டோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்