முகப்புகோலிவுட்

வைரலாகும் யோகி பாபுவின் ‘ட்ரிப்’ டீஸர்..!

  | February 08, 2020 10:48 IST
Trip

இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யோகி பாபு, சுனைனா இணைந்து நடிக்கும் ‘ட்ரிப்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் வெளியாகி வைரலாகிவருகிறது.

யோகி பாபு, சுனைனா மற்றும் கருணாகரன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ட்ரிப்'. டார்லிங், 100, எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் கூர்கா படங்களை இயக்கிய சாம் ஆண்டனின் அஸிஸ்டண்ட் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை சாய் ஃபில்ம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

இப்படத்துக்கு உதய ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபக் எஸ். துவாரக்நாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த த்ரில்லர் காமெடி படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை டேஞ்சர் மணி இயக்க, பாக்யராஜ் கலை இயக்கம் செய்ய, பாடல்களுக்கு சக்தி ராஜு நடன இயக்கம் செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் யோகி பாபுவின் ஸ்பெஷல் லுக் ஆகிய இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்