முகப்புகோலிவுட்

சிம்புவிடம் வம்பிழுக்கும் ஆர்யா..! ‘இருமுகன்’ இயக்குநருடன் கூட்டணி..!

  | March 26, 2020 12:53 IST
Anand Shankar

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக்கத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு கடைசியாக, சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் 45-வது திரைப்படமான ‘மாநாடு' படத்தில் நடித்துவருகிறார்.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிம்பு ஒரு புதிய படத்திற்காக இயக்குநர் மிஷ்கினுடன் இணைவதாகவும் செய்திகள் வந்தன.

இந்நிலையில், ‘அரிமா நம்பி', ‘இருமுகன்' படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக்கத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த வித்தியாசமான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com