முகப்புகோலிவுட்

மாறுபட்ட கூட்டணியில் ‘தளபதி 65’..! வேற லெவல் விஜய் படம் வெயிட்டிங்..!!

  | November 13, 2019 12:24 IST
Thadam

துனுக்குகள்

 • தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
 • இப்படத்தில் கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிக்கிறார்.
 • தற்போது தளபதி 65 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் 65-வது திரைப்படத்தை ‘தடம்' பட இயக்குனர் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்து வெளியான ‘பிகில்' திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தளபதி 64 அன்று அழைக்கப்படும் அடுத்த படத்தில் ‘மாநகரம்' மற்றும் ‘கைதி' புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

தளபதி 64 படத்தில், விஜய் ஒரு கேங்ஸ்டர் என்றும் கல்லூரி மாணவர் என்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வப்போது லீக்காகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்து வரும் நிலையில், தற்போது ‘தளபதி 65' படத்தை பற்றிய சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி விஜயின் 65-வது படத்தை இயக்கவுள்ளார் என்பது தான் அந்தத் தகவல். பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான இந்தச் செய்தியைத் தொடர்ந்து, தளபதி ரசிகர்கள் இந்த இன்ப அதிர்ச்சியை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்ற செய்தியே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்த நிலையில், தற்போது மகிழ் திருமேனியுடனான கூட்டணியை பற்றி அறிந்ததும் எதிர்பார்ப்புகள் உச்சத்தை தொட்டுள்ளது. தளபதியோட திட்டமே வேற மாதிரி இருக்கே..!! 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com