முகப்புகோலிவுட்

தல60 படத்தில் இணையும் ரேஷ்மா! பிக்பாஸில் இருந்து வெளியேரிவருக்கு அடித்த ஜாக்பாட்?

  | August 19, 2019 17:36 IST
Thala 60

துனுக்குகள்

 • ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் நடித்திருந்தார் இவர்
 • பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்டவர் இவர்
 • தல 60 படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்துள்ள படம் ‘நேர்கொண்ட பார்சை'. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
 
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி அடுத்த படத்திற்க தயாராகி வருகிறது. அஜித்தின் 60வது படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியகின. இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது.
 
இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கார் பந்தையம் மற்றும் பை பந்தையத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்திருந்தார். தற்போது இந்த படத்தில் இன்னொரு ஸ்வாரஸ்யமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால்,  ‘பிக் பாஸ் தமிழ் 3' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரேஷ்மா இந்த படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் ரேஷ்மா.
 
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்ட அவர் முதல் நாமினேஷனிலேயே வெளியேற்றப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. எது எப்படியோ ‘தல 60' படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com