முகப்புகோலிவுட்

“தல60” படம் தொடங்கியாச்சா? ட்விட்டரில் வைரலாகும் அஜித்தின் படம்!!

  | September 10, 2019 18:43 IST
Thala

துனுக்குகள்

  • தல 60 படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் நடிப்பதாக தகவல்
  • இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார்
  • விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் இது என கூறப்படுகிறது
“நேர்கொண்ட பார்வை” பத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பை போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் அஜித்தின் 60வது படத்தையும் தான் தயாரிப்பதாகவும், ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கவிருப்பதாகவும் இருந்தது. மேலும் இப்படத்தில் பைக் மற்றும் கார் பந்தையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
 
இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து இருப்பதாக செய்திகள் வெளியானது. அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் அஜித் போட்டோக்கள் சில ட்விட்டர் பக்கத்தில் வேகமாக பறவியது. இதில் அஜித் ஸ்லிம்மாக புதிய தோற்றத்தில் இருந்தார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அஜித் ஷுட்டிங்கில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப்புகைப்படம் தல 60 படத்திற்கான போட்டோ சூட் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த போட்டோ தற்போது ட்விட்டர் பக்கத்தை ஆக்கிரம்பி செய்துள்ளது.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்