முகப்புகோலிவுட்

அஜித்துடன் மூன்றாவது முறையாக இணையும் அனிகா?

  | September 11, 2019 13:26 IST
Ajith

துனுக்குகள்

  • இந்த படத்தில் பைக் ரேஸ் இடம் பெரும் என்று அறிவிப்பு வெளியானது
  • இந்த படத்தில் போனிகபூரின் மகள் ஜான்விகபூர் நடிக்கவிருக்கிறார்
  • ஹெச்.வினோத் இந்த படத்தை எழுதி இயக்குகிறார்
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த படம் அஜித்தின் 60வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் இணையும் நடிகர், நடிகைகள் விவரம் இதுவரை வெளியாகவில்லை. நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது.
 
தற்போது அஜித்தடன் ‘என்னை அறிந்தால்', ‘விஸ்வாசம்',  ஆகிய இரண்டு படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். அப்பா மகள் பாசத்தை மைய்யப்படுத்தி இவர்கள் நடிப்பில் உருவாகி இருந்த ‘உனக்கென்ன வேண்டும் சொல்லு', ‘கண்ணான கண்ணே' இரண்டு பாடல்களும் ரசிகர்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அஜித்தின் 60வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு இவர் இந்த படத்தில் இணைந்தால் அஜித்துடன் அனிகா இணையும் 3வது படமாக இருக்கும்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்