முகப்புகோலிவுட்

நடிகை ஸ்ரீதேவிக்கு முதலாமாண்டு திதி கொடுக்க தன் மனைவியுடன் சென்ற அஜித்!

  | February 14, 2019 21:13 IST
Sridevi

துனுக்குகள்

  • நடிகை ஸ்ரீதேவிக்கு முதலாமாண்டு திதி இன்று கொடுக்கப்பட்டது.
  • அஜித் மற்றும் ஷாலினி இதில் கலந்து கொண்டனர்.
  • தல 59 படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்து இந்திய திரைத்துறையில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களிலும் தன் தடம் பதித்தவர்.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கே. பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன் பின் 16 வயதினிலே, கல்யாணராமன், ஜானி, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், அடுத்த வாரிசு என இவர் நடித்த படங்கள் அனைத்துமே பெரிய ஹிட் அடித்தது.  அண்மையில் வெளியான இங்கிலீஷ் விங்கிலிஷ், புலி போன்ற படங்களிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். 
 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமணம் துபாயில் வெகு சிறப்பாக நடந்தது.  இந்நிகழ்விற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.  அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டல் குளியலறையில் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். 
 
இதைத்தொடர்ந்து வருகிற 24ஆம் தேதி மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு முதலாமாண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.  தமிழ் நாட்குறிப்பு படி நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் திதி கொடுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.  இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி மற்றும் குஷி, போனி கபூரின் சகோதரர் அனில் கபூர், நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் தல 59 படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார்,  அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
 
  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்