முகப்புகோலிவுட்

“தல 60” முக்கிய அறிவிப்பு…! ரசிகர்கள் உற்சாகம்!!

  | June 20, 2019 10:22 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10ல் வெளியாகிறது
  • இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார்
  • போனிகபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்
‘விஸவாசம்' திரைப்படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்க உள்ளார் நடிகர் அஜித். தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படம் ஆகஸ்ட் 10ல் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க உள்ளது. இந்தப் படத்தின் பணிகள் ஆகஸ்டு 29-ந்தேதி பூஜையுடன் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
 
ஆக்‌‌ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கபடவுள்ள நிலையில் எச்.வினோத், போனி கபூர் இருவரும் தற்போது படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்