முகப்புகோலிவுட்

பைக் பந்தயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அஜித்தின் அடுத்த படம்?

  | August 13, 2019 11:20 IST
Ajith

துனுக்குகள்

 • தல60 படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்
 • இந்த படத்தில் ஜான்விக் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
 • எச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார்
Thala 60 Movie Update: எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 8ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. இந்தியில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித், வித்யா பாலன், ஸ்ர்தா ஸ்ரீநாத், அபிராமி, இன்னும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரைவேற்பை பெற்றுள்ளது.
 
இந்த வெற்றியைத் தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படம் இம்மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கவிருக்கிறது. இப்படம் குறித்து போனிகபூர் கூறியதாவது:- “அஜித் நடிக்க உள்ள புதிய படம் முழுமையான அதிரடி சண்டை படமாக இருக்கும். அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். பைக் மற்றும் கார் பந்தய சாகச காட்சிகள் படத்தில் இடம்பெறும். குறிப்பாக பைக் பந்தயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த படத்தை தமிழில் மட்டுமே தயாரிக்கிறேன். இந்தியில் வெளியிடுவது குறித்தும் யோசிப்பேன்.” மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com