முகப்புகோலிவுட்

அஜித்தும் அரசியலும்! கடந்து வந்த பாதை!

  | January 22, 2019 14:05 IST
Thala Politics

துனுக்குகள்

  • அஜித்தின் அறிக்கை நேற்று மாலை வெளியானது.
  • அஜித் நடிப்பில் விசுவாசம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.
  • நான் நடிக்கவே வந்துள்ளேன் அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை.

தமிழ்த் திரையுலகில் தன்னுடைய கடுமையான உழைப்பால் தனக்கென்று தனி இடம் பிடித்திருப்பவர் நடிகர் அஜித் குமார். எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா துறைக்குள் நுழைந்து தன்னுடைய நடிப்பு திறமையாலும், நேர்மையாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ஆகவே தான் அவர் தன் ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும் கூட அஜித்தின் ரசிகர் பட்டாளம் ஒவ்வொரு படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 
dvl8pg6o
 

மேலும் படிக்க - "தல எப்போதும் ஒரு தனிரகம்!"

கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற அஜித்-ஷாலினி காதல் திருமணத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வதை அஜித்  குறைத்துக் கொண்டார். அவர்களது ரசிகர்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு தல வர மாட்டாரா என்று ஏக்கமுற்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு, 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு அஜித் பேசும்போது, இதுபோன்ற விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி வரவழைக்கின்றனர் என்றார். அவரின் பேச்சைக் கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். திமுக தரப்பில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்பலைகள் கிளம்பின.

1eh13tro
 

அஜித்தின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. அஜித் ஜெயலலிதாவின் விசுவாசி என்றும் பேசப்பட்டது. 'ஜெ' செல்லபிள்ளை அஜித் என்றும் பேசப்பட்டது. அந்த நேரங்களில் அஜித் ஜெயலலிதாவிற்குதான் வாக்களிப்பார் என்றும் பேசப்பட்டது. இத்தனை களேபரங்கள் நடந்தும் கூட அஜித் அமைதியாக இருந்தார். அரசியல் குறித்து அவர் எந்த அறிக்கையும், கருத்தும் கூறவில்லை. ஆனால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

மேலும் படிக்க - "அஜித் எழுதிய உருக்கமான கடிதம்!"

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்ற அஜித், தனது பேச்சுக்கான விளக்கத்தை அளித்தார். இந்தச் சந்திப்புக்கு பின்னர், 'அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர்' என அவரை பாராட்டி கருணாநிதி அறிக்கை வெளியிட்டு தொடர் சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அப்பொழுது திமுக, அஜித்தை அரவணைக்கிறது என்று பேசப்பட்டது. திமுகவிற்கு அஜித் ஆதரவு கொடுக்கப் போகிறார் என்கிற கருத்து நிலவியது.  ஆனால் அரசியல் விமர்சனங்களும், அரசியலிலும் சிக்காமல் இருக்க அவருடைய நேர்மையான சந்திப்பு அது என்பது சில நாட்கள் கழித்தே தெரிந்தது.

sa0ncrv8
 

இந்நிலையில் 2002ஆம் ஆண்டு திரைப்படத்துறைக்கு தமிழக அரசு விருது வழங்கும் விழாவில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அஜித்திற்கு பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கினார். இதன் பிறகு அவ்வப்போது ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை அஜித் என தகவல்கள் உலாவின. அதிமுகவில் முக்கிய பொறுப்பை ஜெயலலிதா அவருக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதற்கு காரணம் அவர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்ததே காரணம் என கூறப்பட்டது. இந்த புரளிகளையும் அவர் உடைத்தெரிந்தார். தன்னை சுற்றி வரும் அரசியல் விமர்சனங்களையும், சூழ்ச்சமங்களையும் அவர் பொருட்படுத்தவே இல்லை. காரணம் அவர் அரசியலில் அவருக்கு நாட்டம் இல்லை என்பதே.

702qaeho
 

ஈழ தமிழர்கள் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த போது. திரையுலகினர் அனைவரும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர்.  அந்த போராட்டத்திற்கு அஜித் செல்லவில்லை. காவேரி பிரச்சனைக்கு திரைத்துறை சார்பாக நடைபெற்ற போராட்டத்திலும் அவர் பங்கெடுக்கவில்லை.. இதனால் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் தேசிய வாதிகள் பலர் கடுமையாக அஜித்தை விமர்சித்தனர். அவர் ரசிகர்கள் உட்பட இந்த பிரச்னையில் மனம் உடைந்து போயிருந்தனர் என்பது உண்மை. காலம் எல்லாவற்றிக்கும் சிறந்த மருந்து என்பார்கள் அஜித்தின் மீது இருந்த கோபம் காலம் கடந்த வேகத்தில் மறைந்தது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது திரைத்துறையினர் சார்பில் போராட்டாம் அறிவிக்கப்பட்டது.  அதில் அஜித் கலந்துக் கொள்ளவில்லை. இதில் அஜித் மீது அதிமுகவினர் ஆத்திரம் அடைந்திருந்தனர். திரையரங்குகளில் அஜித் திரைப்படம் வெளிவர விட மாட்டோம் என்றெல்லாம் அக்கட்சியினர் கோபமுற்றனர். அதையும் கடந்து வந்தார் அஜித்.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரிழந்தபோது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித் மறுநாளே புறப்பட்டு சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இரவு நேரத்திலும் கூட  ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தபோது, காவிரி மருத்துவமனைக்கு சென்ற அஜித், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் உயிரிழந்த போதும் ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப் பட்டிருந்த போதும் முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தினார். அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் அஜித்தை நிலை குலைய வைத்தது ஒரு சம்பவம்.

3uiholjo
 

மேலும் படிக்க - "பி.ஜே.பி வலையில் சிக்குகிறாரா தூக்குதுரை?"

திருப்பூரில் அஜித் ரசிகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அஜித்தை பாராட்டியதோடு, அவரது ரசிகர்கள் பிரதமர் மோடியின் சாதனையை பரப்ப வேண்டும் என்றார். இது தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்தது.  தமிழகத்தின், இரு திராவிட கட்சிகளிலும் வாய்ப்பு இருந்தும் அதுவல்ல என்னுடைய பணி என்று, தன்னையும் தன் ரசிகர்களையும் பயன்படுத்தியவர்களுக்கு  இந்த செய்தி தூக்கி வாரி போட்டிருக்கிறது.  எத்தனையோ பிரச்சனையை  கண்டு அமைதி காத்த அஜித், அரசியல் சாயத்தில் இருந்து காக்க திடீரென அதிரடி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை தன் அரசியல் நிலைபாடு என்ன, என்னை நீங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் என பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். யார் கையிலும் சிக்காமல் தன்னுடைய நிலைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்வதன் மூலம்  தமிழிசையின் பேச்சு அஜித்தை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பது புரிகிறது. எப்படி துரத்தினாலும் அரசியல் குறித்த அவருடைய பார்வை நேர்மையாக இருக்கிறது என்று அவர் வெளியிட்ட தற்போதைய அறிக்கை தமிழகத்தில் விவாதபொருளாக மாறியிருக்கிறது.

 

மேலும் படிக்க - ''நான் அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை'' - நடிகர் அஜித்    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்