முகப்புகோலிவுட்

எல்லோரும் எதிர்ப்பார்த்த மங்காத்தா2 ரெடி?

  | October 12, 2019 11:01 IST
Ajith Kumar

துனுக்குகள்

 • கடந்த 2011ம் ஆண்டு மங்காத்தா வெளியானது
 • இதில் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
 • இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது
அஜித்- த்ரிஷா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மங்காத்தா. அர்ஜூன், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் கிரிகெட் சூதாட்டத்திற்கா வரும் கோடிக்கணக்கான படத்தை கொள்ளையடிக்கும் ஸ்வாரஸ்யமான கதைக்களத்தை கொண்டிருந்தது. கலவையான மசாலா திரைப்படமாக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. 

சமீப காலங்களில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பழக்கம் அதிகமாகி இருக்கிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர வேண்டும் என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். பல முறை வெங்கட் பிரபுவிடம் இந்த கேள்வியை பத்திரிகையாளர்களும் அவரது ரசிகர்களும் கேட்டு வந்தனர். இவர்களின் கேள்விக்கும் பதில் கூறும் வெங்கட் பிரபு, தல ஓகே சொன்னால் கதை தயார் என்று கூறியிருந்தார். 

சமீபத்தில் வெங்கட் பிரபு அஜித்தை நேரில் சந்தித்தார் இந்த சந்திப்பை தொடர்ந்து மங்காத்தா2 தொடரவே இந்த சந்திப்பு நடந்தது என செய்திகள் வெளியாகின. ஆனால் மங்காத்தா2 தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது. தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் இதுவே. 
நடிகர் அஜித் நடிப்பில் இந்தாண்டு விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் "நேர்கொண்ட பார்வை" படத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத்தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தல 60 என்கிற தற்காலிக தலைப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் மங்காத்தா2 கதை  தயாராக இருப்பதாக கூறப்டுகிறது. இதனால் மங்காத்தா 2 படம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com