முகப்புகோலிவுட்

உடல் எடையை குறைத்த தல அஜித்! வைரலாகும் மாஸ் போட்டோ!

  | August 21, 2019 12:45 IST
Ajith

துனுக்குகள்

  • தல 60 படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்
  • இப்படத்தில் பைக் சாகசங்கள் இருக்கும் என்று எதிர்பார்கக்கப்படுகிறது
  • இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்துள்ளார்
‘தல60' படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்துள்ள புகைப்படம் சமூகவலையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, இன்னும் பலர் நடித்துள்ளனது. இரண்டு வாரங்களை கடந்த இப்படம் வசூல் சாதனைப்படைத்துள்ளது.
விஸ்வாசம் படத்தைப் போலவே இப்படமும் 100கோடி ரூயாப் வசூல் சாதனைப்படைத்துள்ளது.
 
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச்.வினோத், போனிகபூர், அஜித் இவர்கள் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கார், மற்றும் பைக் பந்தையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அஜித் உடல் எடையை குறைத்த போட்டோ ஒன்று சமூக வலையதளத்தில் வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்