முகப்புகோலிவுட்

ட்விட்டரில் வைரலாகும் அஜித்தின் #AK60 ஃபேன் மேடு போஸ்டர்! மீண்டும் போலீஸ் அதிகாரியாக அஜித்?

  | September 03, 2019 18:51 IST
Ajith

துனுக்குகள்

  • இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்துள்ளார்
  • இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்
  • இப்படத்தில் பைக் ரேஸ் இடம் பெறும் என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்
ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் ஏ.கே.60 ஃபேன் மேடு போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
 
நேர்கொண்டு பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத், அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறது.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நாடு முழுவதும் வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 100கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வசூல் சாம்ரஜ்யம் அமைத்தது இப்படம்.
 
பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தின் ஜீவன் குறையாமல் தமிழில் இயக்கி இருந்தார் வினோத். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூர் தயாரித்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து இந்த மூவரின் கூட்டணி அடுத்த படத்திற்கான வேலையை உடனே தொடங்கியுள்ளனர். இந்த படத்தில் அஜின் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக செய்திகள் ஒரு பக்கம் வெளியாகி வருகிறது.
 
இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் இந்த படத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கார் மற்றும் பைக் ரேஸிர்க்கு முக்கியத்துவம் இருக்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் ஏ.கே.60 என்கிற தலைப்பில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில் அஜித் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. தற்போது இற்த போஸ்டர் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்