முகப்புகோலிவுட்

‘தல’ சொன்னா சொன்னது தான்..!! சமூக ஊடகங்களில் இணைவது குறித்து அறிக்கை வெளியிட்ட அஜித்..!

  | March 07, 2020 20:10 IST
Ajith

"மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை”

நடிகர் அஜித் சமூக ஊடகங்களில் இணையவுள்ளதாக நேற்று செய்திகள் பரப்பபட்டது. ஆனால் இந்த தகவல் போலியானது என்றும், அஜித் எந்த சமூக ஊடக தளத்திலும் சேரப் போவதில்லை என்றும் தெரிவித்து அவரது சட்ட ஆலோசக குழு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஜித் ஊடகங்களிலோ அல்லது எந்த சமூக ஊடக தளங்களிலோ இணையக்கூடாது என்ற கொள்கை உடையவர் என்பது மிகவும் அறியப்பட்ட உண்மை. ஆனால் அவர் திடீரென தான் சமூக ஊடகங்களில் சேரவுள்ளதாக வெளிவந்த இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் அஜித்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விதமாக இந்த பொது அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் அஜித் சிலவற்றை மீண்டும் வலியுறுத்த விறும்புவதாக நான்கு குறிப்புகள் உள்ளன. அவை “அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை, அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை, சமூக ஊடகங்களின் எந்த ஒரு கருத்தையும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை மற்றும் மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை”.

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் இன்னும் இரண்டு ஷெடுல் உள்ளது. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com