முகப்புகோலிவுட்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை கைப்பற்றிய உதயநிதி!

  | August 03, 2019 15:02 IST
Ajith

துனுக்குகள்

  • வரும் ஆகஸ்ட்8ல் இப்படம் வெளியாகிறது
  • இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் நேர்கொண்ட பார்வை
  • இப்படத்தின் பாடல் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் வரும் 8ம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில், இப்படத்தை சென்னை, திருச்சி, சேலம் ஏரியாக்களில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார். இப்படத்தின் டீசர் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்