முகப்புகோலிவுட்

தன் வீட்டில் டப்பிங் தியேட்டரை கட்டும் பிரபல நடிகர்?

  | September 23, 2019 16:50 IST
Thala

துனுக்குகள்

 • அஜித் தனது 60வது படத்திற்கு தயாராகி வருகிறார்
 • எச்.வினேத் இப்படத்தை இயக்கி வருகிறார்
 • அஜித் தனது வீட்டை புதுப்பித்து வருகிறார்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நேர்கெண்ட பார்வை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் கைக்கோர்த்துள்ளது. அஜித்தின் 60வது படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கவிருக்கிறார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அஜித் இந்த படத்திற்காக தன் உடல் எடையையும் குறைத்திருக்கிறார். சமீபத்தில் அவருடைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
7cacbgs

 
அஜித் பொது நிகழ்சிகளை பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். ரசிகர் மன்றத்தையும் கலைத்து தனித்தன்மையோடு இருந்து வருகிறார். இவருடைய புகைப்படங்கள் சமுகவலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரலாகி வருகிறது. அஜித் எங்கு சென்றாலும், அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வழக்கம். இதன் காரணமாக அவரது படப்பிடிப்புகள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் தான் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையில் டப்பிங் பணிகளுக்காக மட்டுமே அஜித் வெளியே வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது தன்னுடைய வீட்டை புதுப்பித்து வருகிறார். இதில்  தனது இல்லத்தில் சொந்தமாக டப்பிங் திரையரங்கம் ஒன்றைக் கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனிவரும் படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இந்த புதிய டப்பிங் திரையரங்கில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com