முகப்புகோலிவுட்

வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்! அடுத்து ஒரு தரமான சம்பவம் இருக்கு!

  | August 24, 2019 19:02 IST
Thala

துனுக்குகள்

  • தல60 படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்
  • இப்படம் இந்த மாதம் இறுதியில் தொடங்கவிருக்கிறது
  • குற்றாலீஸ்வரனின் மிகப்பெரிய ஃபேன் என்று கூறியிதாக தெரிவித்துள்ளார் ரமேஷ்
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 60வது படத்தை நடிக்கவிருக்கிறார். இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.
 
இது தொடர்பாக தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டிருந்தார். இதில் அஜித் ரசிகர்கள் விரும்புகின்ற வகையில் பைக், மற்றும் கார் பந்தயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இடம் பெறும் என்று கூறியிருந்தார்.
 
இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். சமீபத்தில் அஜித் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இன்னொரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அஜித் கிளீன் ஷேவ் செய்து மொழு மொழுவென்று அமுல் பேபி போல் இருக்கிறார். இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் அஜித்துடன் இருப்பவர் நீச்சல் போட்டியில் கின்னஸ் சாதனைப்படைத்த குற்றாலீஸ்வரன். இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக குற்றாலீஸ்வரன் ரமேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில்,
 
அஜித்தின் எளிமை வியப்பாக இருந்தது. அஜித் விளையாட்டு  குறித்து ஆலோசித்தார் என்று தெரிவித்திருந்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் குற்றாலீஸ்வரனின் ரசிகன் என்று அஜித் தெரிவித்ததாகவும் பதிவிட்டிருக்கிறார்.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்