முகப்புகோலிவுட்

மீண்டும் இந்தி ரீமேக்கில் நடிக்கிறாரா அஜித்?

  | September 04, 2019 12:58 IST
Ajith

துனுக்குகள்

  • ஹெச். வினோத் இயக்கும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்
  • இப்படத்தில் பைக் ரேஸ் இடம் பெறும் என தயாரிப்பாளர் ஏற்கனவே அறிவிப்பு
  • இம்மாதத்தில் தல 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
பிங்க் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
 
‘நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத், அஜித், போனிகபூர் கூண்டனி இணைந்துள்ளது. பெரிடப்படாத இப்படத்தை ஏ.கே.60 என்று ரசிகர்கள் கூறிவருகிறார். அஜித்தின் 60வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
l43bk7d8
 
இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆர்டிகள் 15'. ஆயுஷ்மான் குரானா இப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை அண்மையில் பார்த்த அஜித், அதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் உரிமமும் போனி கபூர் வசமுள்ளதால், அஜித்தின் 61-வது திரைப்படமாக இப்படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்