முகப்புகோலிவுட்

அஜித் குறித்து டிவிட்டர் நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

  | November 13, 2019 17:17 IST
Thala

துனுக்குகள்

 • விஸ்வாசம் திரைப்படம் ட்விட்டரில் சாதனை
 • அஜித் ரசிகர்கள் பகிர்ந்த விஸ்வாசம் ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் முதலிடம்
 • அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்
உலகம் முழுவதும் ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் நடந்தால் உடனே அதுகுறித்த  ஹேஷ்டேக் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு டிரண்டுக்கு வருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக தமிழக ட்விட்டர் பயணாளர்கள் பயன்படுத்திய ஹேஷ்டேக்குகள் அடிக்கடி உலக அளவில் டிரெண்டான சம்பவங்கள் சமீபத்தில் அதிகம் நடந்ததைப் பார்த்தோம்.
 
இந்த ஆண்டு தொடக்கத்திலே பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானதை முன்னிட்டு ட்விட்டரில் ஹேஷ்டேக்குகளும் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கோ பேக் மோடி ஹேஷ்டேக் தமிழகத்தில் அதிகம் பகிரப்பட்டது.
 
சமீபத்தில் வெளியான ‘பிகில்' திரைப்படம், சூர்யாவின் ‘காப்பான்' உள்ளிட்ட படங்களின் ஹேஷ்டேக்குகள் அதிகமாக பகிரப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு டுவிட்டரில் அதிக அளவில் பிரபலமான ஹேஷ்டேக்குகள் எவை என்பது குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் ‘விஸ்வாசம்' திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மகாராஷ்டிரா மற்றும் தீபாவளி ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம்பெற்று உள்ளன. இந்த செய்தி அறிந்த அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com