முகப்புகோலிவுட்

தணிக்கை சான்று பெற்றது ‘நேர்கொண்ட பார்வை’!

  | July 18, 2019 12:27 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • பிங்க் படத்தின் ரீமேக் நேர்கொண்ட பார்வை
  • ஆகஸ்ட் 8ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது
  • இப்படத்திற்கு யூ மற்றும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது
இந்தியில் கடந்த ஆண்டு வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ‘நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை எச்.வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார்.
 
இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்க வித்யாபாலன், ஷர்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிசந்திரன், அர்ஜுன் சிதம்பரம் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று இப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் போனிகபூர். இந்லையில் தணிக்கை குழு சான்றிதழ் பெற இப்படம் தணிக்கைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற் ‘யூ' மற்றம் ‘ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
 
விஸ்வாசம் திரைப்படத்தைப் போலவே அஜித் ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாட முடிவு செய்து அதற்கான திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டனர்.  ரசிகர்களின் கொண்டாட்டங்களின் மத்தியில் இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்