முகப்புகோலிவுட்

ரசிகர்களின் படை சூழ நிரம்பிய திரையரங்குகள்! “நேர்கொண்ட பார்வை” கொண்டாட்டங்கள்!

  | August 08, 2019 14:30 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

  • திரையரங்குகளை சூழ்ந்த அஜித் ரசிகர்கள்
  • நேர்கொண்ட பார்வை படத்தை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டாம்
  • இன்று வெளியா இப்படத்தை திரைப்பிரபலங்கள் பலரும் ரசிர்கர்களோடு பார்த்தனர்
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை, இந்த படத்தை எச்.வினோத் இயக்க யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
 
இத்திரைப்படம் மக்களுக்கு காட்சி படுத்துவதற்கு முன்பே விமர்சர்களுக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது. இப்படத்தை பார்த்த விமர்சகர்கள் பெரும்பாண்மையானோர் நேர்மறை விமர்சனங்களையே முன்வைத்தனர். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
 
இன்று திரையரங்குகளில் வெளியான படத்திற்கு நேற்று முதலே அஜித் ரசிகர்கள் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் கூடி கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். இரவு முழுவதும் பேனர் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது. கட்அவுட் வைப்பது என தியேட்டர்கள் திருவிழாகோலமானது. இன்று காலை விழங்கப்பட்ட சிறப்பு காட்சிகளில் இருந்தே ரசிகர்கள் கட்அவுட்டிற்கு பாலபிஷேசம் செய்து, பட்டாசு வெடித்தும், இனிபுகள் வழங்கியம் கொண்டாடி வருகிறார்கள். முதல் நாள் முதல் காட்சியை காண விடியற்காலையில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கிற்க வரத்தொடங்கி படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்