முகப்புகோலிவுட்

இணையதளத்தில் "நேர்கொண்ட பார்வை" தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பால் படக்குழு அதிர்ச்சி!

  | August 08, 2019 11:40 IST
Tamilrockers

துனுக்குகள்

  • தமிழ்ராக்கர்ஸை முடக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்
  • நாளை நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது
  • தமிர்ராக்கர்ஸ் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்
விஸ்வாசம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு அஜித் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கி இருக்கிறார்.
இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாக இப்படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 1129 இணயதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
 
தமிழ் சினமா மட்டுமில்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் அச்சுரத்தலாக விளங்கி வரும் தமிர்ராக்கர்ஸ் தொடர்ந்து புதிய படங்களை தனது வளையதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ஒவ்வொரு பெரிய கதாநாயகனின் திரைப்படம் வரும் போது தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டு அச்சுறுத்தி வருகிறது தமிழ்ராக்கர்ஸ். இந்த முறை தமிழ்ராக்கர்ஸில் மட்டும் அல்லாமல் மற்ற எந்த வலைதளங்களிலும் வெளியிடமுடியாதபடி நீதி மன்றம் நாடி உத்தரவு பெற்றார் நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர். இதனால் தமிழ்ராக்கர்ஸில் ‘நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகது என அஜித் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் தமிழ்ராக்கர்ஸ் நாளை இரவு 8மணிக்கு படத்தை வெளியிடப்போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பலர் கோபம் அடைந்துள்னர்.  தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைள் எடுத்தும் தமிழ் ராக்கர்ஸ் திரையுலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. விரைவில் இதற்கு ஒர முடிவு கட்ட வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்