முகப்புகோலிவுட்

கர்ஜிக்கும் அஜித்; மிரட்டும் ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர்!

  | June 13, 2019 10:53 IST
Nerkonda Paarvai

துனுக்குகள்

 • எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்
 • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
 • போனிகபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்
எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்திருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை'. அஜித்தின் நடிப்பில் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 10ல் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியான ‘பிங்க்' திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

இப்படத்தில் 3 பெண்கள் பாலியல் வன்புணர்வு பிரச்னையில் சிக்கிகொள்கிறார்கள். அந்த பிரச்னை நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த மூன்று பெண்கள் சார்பாக நடிகர் அஜித் வழக்கறிஞராக ஆஜராகிறார். இந்த ட்ரெய்லரில் அஜித் வாதாடும் காட்சிகள் இடம் பெறுகிறது.
 
அஜித்திற்கே உரிய ஸ்டைலில் இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக கர்ஜிக்கிறார். அவருக்கு எதிர் வாதம் வைக்கும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே வருகிறார். அஜித்திற்கு ஏற்றவாறு சண்டைகாட்சிகளும் இடம் பெறுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் பின்னி இருக்கிறார்.
 
அஜித்திற்கு இந்த படம் முக்கியத் திரைப்படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது ஆனால் விஸ்வாசம் திரைப்படம் கொடுத்த பொருளாதார வெற்றியை இப்படம் கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com