இப்படத்தில் 3 பெண்கள் பாலியல் வன்புணர்வு பிரச்னையில் சிக்கிகொள்கிறார்கள். அந்த பிரச்னை நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த மூன்று பெண்கள் சார்பாக நடிகர் அஜித் வழக்கறிஞராக ஆஜராகிறார். இந்த ட்ரெய்லரில் அஜித் வாதாடும் காட்சிகள் இடம் பெறுகிறது.
அஜித்திற்கே உரிய ஸ்டைலில் இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக கர்ஜிக்கிறார். அவருக்கு எதிர் வாதம் வைக்கும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே வருகிறார். அஜித்திற்கு ஏற்றவாறு சண்டைகாட்சிகளும் இடம் பெறுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் பின்னி இருக்கிறார்.
அஜித்திற்கு இந்த படம் முக்கியத் திரைப்படமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது ஆனால் விஸ்வாசம் திரைப்படம் கொடுத்த பொருளாதார வெற்றியை இப்படம் கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.