முகப்புகோலிவுட்

புதிய கெட்டப்பில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

  | June 12, 2019 18:58 IST
Thala Ajith

துனுக்குகள்

  • போனிகபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கிறார்
  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • எச்.வினோத் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
கடந்த ஆண்டு பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி இன்னும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை நேர்கொண்ட பார்வை என்கிற தலைப்பில் ஏச்.வினோத் இயக்கி வருகிறார்.
 
இதில் அஜித் வழக்கறிஞராக நடிக்க அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
 
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் அஜித்  ரேஸசர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. இந்த கெட்டப்  ‘தல 60' படத்துக்கான கெட்டப்பாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் தனியார் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ‘இந்த படத்தில் அஜித்திற்கு பிடித்த எல்லாம் இருக்கிறது. இதில் அஜித் அஜித்தாகவே இருப்பார்” என்று கூறியிருந்தார். இதனால் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இது இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்