முகப்புகோலிவுட்

யூ ட்யூபில் ட்ரெண்டாகும் 'விஸ்வாசம்' மேக்கிங் வீடியோ

  | February 13, 2019 12:50 IST
Thala Ajith

துனுக்குகள்

  • ஸ்டெப் பிராக்டிஸ் பண்ணும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
  • விஸ்வாசம் படத்தின் வீடியோ மேக்கிங் வெளியானது.
  • ஒன் மில்லியன் வியூசை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோவை சத்ய ஜோதி நிறுவனம் தனது யூ ட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது. ஒன் மில்லியன் வியூசை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வீடியோ வலை தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 

அஜித் - நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மகள், மனைவி பாசம் மற்றும் குடும்ப களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படம் ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. 
 

இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி, விஸ்வாசம் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளது. சத்ய ஜோதியின் யூ ட்யூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோ வலை தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

8.38 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அடிச்சி தூக்கு பாடலுக்கு அஜித் ஸ்டெப் பிராக்டிஸ் பண்ணும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்