முகப்புகோலிவுட்

100 வது நாள் வெள்ளி விழா கானும் ‘விஸ்வாசம்’

  | April 20, 2019 15:13 IST
Thala Ajith

துனுக்குகள்

 • இப்படத்தை இயக்குநர் சிவா இயக்கினார்
 • டி.இமான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
 • அஜித்துடன் நயன்தாரா இப்படத்தில் நடித்திருந்தார்
வீரம், வேதாளம், விவேகம், படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவாவின் கூட்டணியில் நான்காவது முறையாக அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம்.
 
dvdhgjko


இந்த ஆண்டு பொங்கலை குறிவைத்து இந்த படம் வெளியானது.  பெரும் எதிர்பார்ப்புகளை நோக்கி வெளிவந்த இந்த படம் அஜித்தின் சினிமா பயணத்தில் ஒரு மையில் கல்லாக அமைந்தது. ஆம் இதுவரை அஜித் நடித்து வெளிவந்த படங்களிலே அதிக வசூலை அள்ளிய படம் என்றும் 100நாள் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கம் படம் என்று சாதனைப்படைத்திருக்கிறது.
 
fmrnmt78

திரைப்படம் திரையிடப்பட்டு நேற்றோடு 100 வது நாளை நிறைவு செய்திருக்கிறது. இன்னும் சில இடங்களில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. தந்தைக்கும் மகளுக்குமான ஆழமான உறவை உணர்வுகள் ரீதியாக இந்த படம் வெளிப்படுத்தியிருந்தது.
 
 
07003epo

அடாவடியாக இருக்கும் அஜித், திருமணத்திற்கு அவர் விட்டு வைத்த பிரச்னைகள் அவரை தொடர்கிறது. இதனால் தன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று குழந்தையை அவரிடமிருந்து பிரித்து செல்கிறார் நயன்தாரா.
தனியாக வசிக்கும் நயன்தாரா தொழில் ரீதியாக பிரச்னைகளை சந்திக்கிறார். அதனால் அவருடைய பெண் ஆபத்தில் சிக்குகிறார். அந்த ஆபத்தில் இருந்து தன்னுடைய குழந்தையை எப்படி அஜித் காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை.
 
 
25huq8m

வேகமும், விவேகமாக அஜித் தன்னுடைய நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் கொஞ்சம் கூடுதல் நய்யாண்டியோடு களம் இறங்கி இருந்தார் அஜித்.
 
s3fod67
 
குடும்பங்கள் கொண்டாடும் படமாக விஸ்வாசம் அமைந்திருந்தது.  படம் வெளியான நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது இந்த படம்.
 டி இமான் இசையில் கண்ணாண கண்ணே பாடல் மகளை நேசிக்கும் அத்தனை தந்தையின் குரலாக இன்றும் ஒளித்துக்கொண்டிருக்கிறது.சிவா இயக்கத்தில் அஜித் மூன்று படங்கள் நடித்திருந்தாலும், இந்த படம்தான் சிவாவிற்கும் திருமுனையாக அமைந்திருந்தது.
 
v6e65kp

நயன்தாரா இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் ரோபோ, சங்கர், இன்னும் பலர் நடித்திருந்தனர். தற்போது 100வது நாளை இப்படம் கொண்டாடி வருகிறது. அஜித் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி  வருகிறார்கள்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com