முகப்புகோலிவுட்

‘வாழு வாழவிடு’ கொண்டாடப்பட வேண்டியவர் அஜித் #HBDTHALA

  | May 01, 2019 09:29 IST
Thala

துனுக்குகள்

  • இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அஜித்
  • அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது
  • நேர் கொண்ட பார்வையில் நடித்து வருகிறார் இவர்
மே 1 உழைப்பாளர்கள் தினம், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய உழைக்கும் தொழிலாளர்களுக்கான நாளாக இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தொழிலாளர்களுக்காக இந்த நாள்கொண்ட்டாடப்படுவதற்கு பின்னால் பெரும் போராட்டங்களும், பெரும் இழப்புகளையும் அடங்கி இருக்கிற்ன என்பதை தெளிவுபடுத்திகொள்ள வேண்டும்.
 
ktd6e8b8

 
உலக நாடுகளே ஒன்றாக கொண்டாடும் இந்த திருவிழாவான மே 1ல்தான் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த ஆளுமை, சிறந்த கலைஞர் அஜித் பிறந்த தினம்.
 
b3ge00c8


பெரிய அளவில் சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார் இவர். எத்தனையோ நெருக்கடிகள். போராட்டங்கள், போட்டிகள் நிறைந்த இந்த திரையுலகில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தையே கட்டி வைத்துள்ளார் அஜித்.
 
km4gi1fg

 
ரசிகர் மன்றங்கள் வேண்டாம். என்று ரசிகர் மன்றங்களை கலைத்தார். ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அவரை நோக்கி ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் புறப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
r7vm9ttg

 
திரைப்பிரபலங்கள் அரசியலுக்கு வருவது மிகவும் எளிமையான காரியமாக மாரிவிட்ட நிலையில். இவரும் அரசியலுக்கு வருவார் என்றும் , வர வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
 
1fmnst18


சில அரசியல் கட்சிகலோ இவரை தன் பக்கம் ஈர்த்துவிடலாம் என தந்திர திட்டங்களை தீட்டின. தன்னுடைய ரசிகன் எடுக்கும் அரசியல் நிலைபாட்டிற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். இதை ரசிகர்கள் என்னுடைய பெயரைச் சொல்லி அரசியல் கட்சிகளில் இணைய வேண்ட்டாம் என்று அறிக்கை வந்த்து. அதிர்ந்து போனார்கள் அரசியல்வாதிகள்.
 
k09qa1k8

 
தலைமை ஏற்க வேண்டாம் தலையகேவே இருந்து விடு ‘தல' என்று ரசிகர்கள் விடுத்த முழக்கம் இன்றும் காதுகளில் ஒலிக்கிறது. தனிப்பட்ட முறையில் தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கு செய்யும் உதவிகள் ஏராளம்.
 
spd36lg8

அவர் செய்யும் உதவிகள் வெளி உலற்கு தெரிவதே இல்லை.  இதனால் தானோ என்னவோ அஜித் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.
 
tjvff4d8

 
எத்தனையோ தந்திர வலைகள், விரிக்கப்பட்டாலும் இவருக்கும் இவருடைய ரசிகர்களுக்கும் ஒரே மந்திரம்தான். “வாழு வாழவிடு”.
 
66a960g8


பெரும் போட்டிகளும், போராட்டங்களும் நிறைந்த திரையுலகில் யாராலும் நிரப்ப முடியாத தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
 
nvpn5el

ஆம் அஜித் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன். அஜித் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். #HBDthala
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்