முகப்புகோலிவுட்

தளபதியின் ‘குட்டி ஸ்டோரி’ இசையில் வைரலாகும் ‘தல தோனி ஸ்டோரி’ பாடல்..!

  | July 07, 2020 19:03 IST
Thala Dhoni

துனுக்குகள்

 • 'மாஸ்டர்' குட்டி ஸ்டோரி பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்
 • இப்போது 'தல' ஸ்டோரி பாடலை VJ பாவனா பாடியுள்ளார்
 • தோனி இன்று 39-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கிரிக்கெட் உலகின் மறுக்கமுடியாத மிகப் பெரிய, பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் புகழ்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் ஒரு அழகான வீடியோ பாடலைக் கொண்டு தோனியின் பிறந்தநாளுக்காக சமர்ப்பணம் செய்துள்ளது. அதில் ‘தளபதி' விஜய்யின் ‘மாஸ்டர்' படத்திலிருந்து சமீபத்தியஹிட் பாடலான ‘குட்டி ஸ்டோரி' பாடலின் இசையில், ‘தல ஸ்டோரி' பாடலாக வரிகளை மாற்றி வெள்யிட்டுள்ளனர்.

ஸ்டார் விஜய் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் பிரபல வி.ஜே. பாவனா ‘தல ஸ்டோரி' பாடலுக்கு பாடகராக மாறியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

‘குட்டி ஸ்டோரி' பாடல் உலகம் முழுக்க ஹிட்டாகிவரும் விஜயின் ‘மாஸ்டர்' பட பாடலாகும். இப்பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகள் எழுத, அனிருத் இசையமைக்க ‘தலபதி' விஜய் பாடியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் வரவிருக்கும் ‘மாஸ்டர்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும்.  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com