முகப்புகோலிவுட்

வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு நம்ம சூரி அண்ணன் பன்ற வேலைய பாருங்க..! வைரலாகும் வீடியோ..!

  | February 12, 2020 13:57 IST
Soori

துனுக்குகள்

  • வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் 'ப்ரோட்டா' சூரி என பிரபலமானார்.
  • விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
  • நடிகர் சூரி தற்போது தலைவர் 168 திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

நடிகர் ‘பரோட்டா' சூரி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பஜ்ஜி சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் 50 பரோட்டாவை சாப்பிடும் காட்சி மூலம் பிரபலமைடந்தவர் காமெடி நடிகர் சூரி. முன்னதாகவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், வெண்ணிலா கபடிக்குழுவிற்கு பிறகே அவர் ‘பரோட்டா சூரி' என்று அறியப்படார்.

பின்பு விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஷால் என பல முன்னணி நடிகர்களுடனும் காமெடிக் கதாப்பாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். தற்போது ரஜினியின் ‘தலைவர் 168' திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், வெற்றிமாறன் இயக்கும் புதிய திரைபடத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அவர் வேட்டியை மடித்துக்கொண்டு நல்ல பெரிய கடாயில் பஜ்ஜி சுட்டுள்ளா. அந்த வீடியோவுடன் “நீங்க shotuku கூப்பிடுங்க இல்ல கூப்டாம போங்க, நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்..” என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் பிரபலமான டைலாக் ஸ்டைலில் பதிவிட்டுள்ளார். அவர் சமீபத்தில் தனது தாய்-தந்தைப் பெயரில் புதிய உணவகத்தை திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்