முகப்புகோலிவுட்

“தலைவி” படத்தில் ஜெயலலித்தாவாக நடிக்கும் இந்தி நடிகை…!

  | March 23, 2019 15:58 IST
Jayalalitha Biopic

துனுக்குகள்

  • இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்
  • ஜி.வி.பிரகாஷ இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • கங்கனா ரனாவத் இப்படத்தில் ஜெயலலித்தாவாக நடிக்கிறார்
ஜீவா இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமான இந்தி நடிகை கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார், அதுவும் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில்.

மதராசபட்டினம், தலைவா, தேவி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய், ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்குவதாக முன்னதாக அறிவித்தார். அந்த படத்திற்கு தலைவி என்ற டைட்டிலையும் வெளியிட்டார். ஆனால், யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறார் என்ற தகவலை வெளியிடவில்லை.
 
வித்யாபாலன் ஜெயலலிதாவாக நடிப்பார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது, தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் ‘தலைவி' என்றும் இந்தியில் ‘ஜெயா' என்றும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இன்று கங்கனா ரனாவத்தின் பிறந்த நாள் என்பது குறிப்பிடதக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்