முகப்புகோலிவுட்

ஜெயலலிதாவாக நடிப்பது பற்றி கங்கனா ரனாவத் ஸ்வாரஸ்ய தகவல்

  | March 25, 2019 14:57 IST
Kangana Ranaut

துனுக்குகள்

  • இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்
  • இந்த படத்திற்கு ஜி.வி.பிராகாஷ் இசை அமைத்திருக்கிறார்
  • இந்த படம் மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது
முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இதற்கு ‘தலைவி'என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.

கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி  பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் கூறியிருப்பதாவது:-
‘ஜெயலலிதா, அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பிரபலமான அரசியல்வாதியும் கூட. இதையே ‘ஜெயா' திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத்
தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.
ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன்' என்றார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்படதக்கது.
ஜெயலலிதா முதல்வர் பதவில் இருக்கும் போது சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பின் விடுதலை ஆனார். அந்த வழக்கு மேல் முறையீட்டிற்கு சென்றது. வழக்கு முடிவதற்குள் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.  அவருடைய மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. வழக்கின் முடிவில் அவரும் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிட தக்கது. இந்த தகவல்கள் எல்லாம் திரைப்படத்தில் இடம் பெறுமா….?
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்