முகப்புகோலிவுட்

மீண்டும் அனிருத் இசையில் பாடுகிறார் நடிகர் விஜய்! உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

  | November 19, 2019 14:58 IST
Thalapathi Vijay

துனுக்குகள்

  • இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது
  • இந்த படத்தில் மாளவிகா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார்
  • இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைப்பெற்று வருகிறது
தளபதி 64 படத்தில் விஜய் ஒரு பாடலை பாட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'பிகில்' திரைப்படம் வணிக ரீதியான வெற்றியைப்பெற்று மீண்டும் சாதனைப்படைத்தது. கால் பந்து விளையாட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் கால் பந்து வீரராகவும் பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். 

இப்படத்தைத் தொடர்ந்து விஜய் 'மாநகரம்', 'கைதி' உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 64வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்தப் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனன் நடித்து வருகிறார். இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனிருத் இசையில் 'கத்தி' படத்தில் "செல்பி புள்ள'" பாடலை விஜய் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்