முகப்புகோலிவுட்

தளபதி 64 படத்தின் அதிரடி அறிவிப்பு! விஜய்யுடன் இணையும் மலையாள பிரபலம்!

  | October 01, 2019 18:40 IST
Thalapathy 64

துனுக்குகள்

  • நேற்று விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்ததை அறிவித்தது படக்குழு
  • ஆண்டனி வர்கீஸ் இந்த படத்தில் இணைந்துள்ளார்
  • இன்னும் இரண்டு வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படவிருக்கிறது
விஜய் நடிக்கவுள்ள தளபதி 64 படத்தில்  முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
அட்லி இயக்கி இருக்கும் 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் இணையும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
நேற்று  மாலையே விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், தொடர்ச்சியாக 3 நாட்கள் 'தளபதி 64' தொடர்பான அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் ஆண்டனி வர்கீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் இவர் 'அங்காமலே டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்