முகப்புகோலிவுட்

அவரோடு நடிப்பது வேற லெவல் அனுபவம் – விஜய் படத்தில் இணைந்த டி.வி நடிகை!

  | November 18, 2019 14:26 IST
Thalapathy 64

துனுக்குகள்

 • இந்த படதிற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை
 • டி.வி.தொகுப்பாளினி ரம்யா இந்த படத்தில் நடித்துள்ளார்
 • தற்போது சௌந்தர்யா நந்தகுமார் இணைந்துள்ளார்
அட்லி இயக்கத்தில் வெளியான ‘பிகில்' படத்தை அடுத்து விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'தளபதி 64'. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கௌரி கிஷன், டி.வி.தொகுப்பாளினி ரம்யா, மாளவிகா மேனன், சாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனார்.  
 
படத்தில் தற்போது மேலும் ஒரு தொலைக்காட்சி நடிகையான சௌந்தர்யா நந்தகுமார் இணைந்துள்ளார். இந்தப் படம் குறித்து சௌந்தர்யா கூறுகையில், தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தன்னுடைய நடிப்பை பார்த்து லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்ததாகவும், அவருடைய அழைப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து இயக்குனர் 2லோகேஷ் கனகராஜ் கூறியதை கேட்டு ஆச்சரியமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com