முகப்புகோலிவுட்

தளபதி 64 படத்தில் விஜய்யுடன் ஜோடிசேறும் நடிகை யார்?

  | August 07, 2019 20:45 IST
Thalapathy 64

துனுக்குகள்

  • தீபாவளி அன்று பிகில் படம் வெளியாக இருக்கிறது
  • தளிபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்
  • இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவிருக்கிறது
அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் பிகில் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் வேலைகளை விரைவில் முடித்து இந்தாண்டு தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
 
இந்த படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64வது படத்திதை தொடங்கவிருக்கிறார் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. பி.வி. கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து துவங்கும் என்று கூறப்படுகிறது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்