முகப்புகோலிவுட்

“தளபதி-64” படத்திற்கு புதிய சிக்கல்! எப்படி சமாளிக்க போகிறார் லோகேஷ் கனகராஜ்!

  | November 05, 2019 15:01 IST
Thalapathy

துனுக்குகள்

  • இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது
  • இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார்
  • மாளவிகா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்
அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
 
இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
 
சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு படப்பிடிப்புக்கு பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
காற்றுமாசு காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், குறைவான நேரம் மட்டுமே விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாகவும், விஜய் சேதுபதி இறுதிக்கட்ட ஷுட்டிங்கின் போது கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க இயற்கை கைகொடுக்குமா இதனை எவ்வாறு கையாளப்போகிறார் லோகேஷ் கனகராஜ் பொருத்திருந்து பார்ப்போம்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்