முகப்புகோலிவுட்

‘தளபதி 64’ 3-ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவக்கம்..! சினிமா பெட்டியில் இன்று..

  | December 03, 2019 17:35 IST
Thalapathy 64

இன்றைய சினிமா பெட்டியில், விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் துவக்கம், தனுசு ராசி நேயர்களே படத்தின் அப்டேட் உள்ளிட்ட செய்திகளை பார்க்கலாம்...

இன்றைய சினிமா பெட்டியில், விஜய் நடிக்கும் ‘தளபதி 64' படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளது, இந்த செய்தியோடு, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவரவுள்ள ‘தனுசு ராசி நேர்யர்களே', சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா' மற்றும் இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகளை பார்க்கலாம்...

விஜயின் தளபதி 64 பட லேட்டஸ்ட் அப்டேட்...
 
rsc4uuho

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 64'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இன்று ட்சென்னையில் தொடங்கியது. இந்த குறுகிய ஷெடுல் வரும் 7 அல்லது 8-ஆம் தேதிக்குள் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவரவுள்ள ‘தனுசு ராசி நேர்யர்களே' படம் குறித்த முக்கிய அறிவிப்பு..
 
5jhvai48

ஹரிஷ் கல்யாண் மற்றும் டிகங்கனா சூர்யவன்ஷி நடிக்கும் திரைப்படம் ‘தனுசு ராசி நேர்யர்களே'. இப்படத்தை பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘பிகில்' திரைப்படத்தில் நடித்த ரெபா மோனிகா இப்படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கிறார். இம்மாதம் 6-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு தனிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா' பட அப்டேட்...
 
02eneso

சுந்தரபாண்டியன் திரைப்படத்துக்குப் இறகு இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் மற்றும் சசிகுமார் இணையும் திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா'. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மேலும் இதில் பரோட்டா சூரி நடிக்கிறார். இந்தர் குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு, ‘கணா' பட இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. சன் டிவி சமீபத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம்...
 
qpkuls28

மூன் பிக்சர்ஸ் தயாரிப்பில் V.Z. துரை இயக்கத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘நாற்காலி'. அரசியல் கதைகளத்தில் உருவாகும் இப்படத்தில், அமீர் அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்துக்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, சுதர்ஷன் படத்தொகுப்பு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com