முகப்புகோலிவுட்

இவர் இயக்கத்தில்தான் 'தளபதி 65' திரைப்படம் வரப்போகிறதா?

  | July 01, 2019 18:15 IST
Thalapathy 65

துனுக்குகள்

 • தளபதி 63 திரைப்படமான பிகில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது
 • தளபதி 64 திரைப்படத்தை இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்
 • இவர் 'மாநகரம்' திரைப்படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்தில் 'தளபதி 63' திரைப்படமான 'பிகில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாள் முன்பு வெளியானது. அதன்பின் அவரது பிறந்தநாளன்று இரு போஸ்டர்கள் என அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, ரசிகர்களை களிப்பில் ஆழ்த்தியது. இந்த போஸ்டர்கள் மூலம், விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார், தந்தை மகன் என இரண்டு கதாப்பாத்திரங்கள், அதில் மகன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் விஜய், ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கவுள்ளர் போன்ற தகவல்கள் தெரிய வந்தன. இந்நிலையில், 'தளபதி 65' திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'தளபதி 65' திரைப்படத்தை 'இயக்குனர் சங்கர்' இயக்கவுள்ளதாக வதந்தி வெளியாகியுள்ளது. ஒரு தனியார் ஊடக நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது. அந்த ட்வீட்டில் '#Thalapathy65' என்ற ஹேஸ்டேக் ஒன்றை குறிப்பிட்டு, அதன் கீழ் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் சங்கர் ஒருமித்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது. இதன்படி தளபதி 65 திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தளபதி 63-யான பிகில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், தளபதி 64 திரைப்படத்தை ‘மாநகரம்' படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com