முகப்புகோலிவுட்

சற்று நேரத்தில் ட்விட்டரில் மெர்சல் காட்டிய ‘தளபதி’..! மரக்கன்று நடும் புகைப்படங்கள் வைரல்.!

  | August 11, 2020 20:20 IST
Vijay

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மூலமாக ‘தளபதி’ விஜய்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டோலிவுட் ஸ்டார் மகேஷ் பாபுவின் பரிந்துரைதை ஏற்ற ‘தளபதி' விஜய் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதனை ட்விட்டரில் பகிர்ந்த சில நிமிடங்களில் தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தென்னிந்திய பொழுதுபோக்கு துறையில் மிகவும் பிரபலமான பல முன்னணி நடிகர் நடிகைகள் பசுமை இந்தியா சவால் (Green India Challenge) என்ற புதிய ஹாஷ்டேகுடன் தங்களது வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், ஓவ்வொருவரும் தனது சக நடிகர்கள் மற்றும் சினிமா சகோதரத்துவங்களுக்கு இந்த சவாலை பகிர்ந்து வருகின்றனர்.

skmq5umg

இந்நிலைலையில், இந்த சவால் இப்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மூலமாக ‘தளபதி' விஜய்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை விஜய்யின் ரசிகர்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில் #ThalapathyVijay மற்றும் #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேகுகள் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. 

dgv7kuog

‘தளபதி' விஜய் தனது மரம் நடும் புகைப்பாங்களைப் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டதோடு “மகேஷ் பாபு காரு இது உங்களுக்காக தான். பசுமையான இந்தியாவுக்காவும், நல்ல ஆரோக்கியத்துக்காகவும் இதோ. நன்றி #StaySafe” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தொழில் முன்னிலையில், கடைசியாக ‘அட்லீ' இயக்கத்தில் ‘பிகில்' படத்தில் நடித்திருந்த ‘தளபதி' விஜய், இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்' வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இப்படம் எப்போது வெளியானாலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாற்ற அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com