முகப்புகோலிவுட்

விரைவில் ஒன்றிணையும் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி.!

  | September 04, 2020 00:56 IST
Vetrimaaran

தனுஷின் ‘அசுரன்’ படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை தொடங்குகிறார்.

கோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் வெட்றிமாறன். அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டத் தவறியதில்லை, அவை எப்போதும் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டுள்ளன.

அண்மையில் வெளிவந்த செய்திகளில், இயக்குநர் வெற்றிமாறன் ‘தளபதி' விஜய்யுடன் கைகோர்க்கத் தயாராகிவிட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த தகவல்கள் மங்கிவிட்டன. இப்போது, ஒரு நேர்காணலின் போது, இயக்குநர் வெற்றிமாறன் விஜய்யுடனான படம் எதிர்காலத்தில் நடக்கும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

தகவல்களைன் படி, வெற்றிமாறன் விஜயுடனான தனது படத்திற்கான ஸ்கிரிப்டை உருவாக்கத் தொடங்கியுள்ளதாகவும், மேலும் இந்த திட்டத்தைத் தொடங்க விஜய்யின் அழைப்புக்காக அவர் காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இப்படம் ஒரு மாஸ் எண்டர்டெயினராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்யுடன் கைக்கொர்க்கவிருந்த நிலையில், சில அறியப்படாத காரணங்களால் அது நடக்கவில்லை.

இதற்கிடையில், தனுஷின் ‘அசுரன்' படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்' படத்தை தொடங்குகிறார். வெளிப்படையாக, இந்த படம் ஒரு பழிவாங்கும் நாடகம் என்றும் ஜல்லிக்கட்டுத் திருவிழாவை மய்யப்படுத்தி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மறுபுறம், விஜய் தற்போது லோகேஷ் கனகராஜுடன் தனது ‘மாஸ்டர்' வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய எதிரியாகவும், ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி பெண் கதாப்பாத்திரங்களில் காணப்படுவார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com