முகப்புகோலிவுட்

பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு; ரசிகர்கள் கொண்டாட்டம்!

  | June 26, 2019 17:36 IST
Bigil Movie

துனுக்குகள்

  • இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார்
  • ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்
  • ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
தெறி, மெர்சல், படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் ‘பிகில்'. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர், இன்னும் பலர் நடிக்கிறார்கள்.
 
மேலும் விஜய்யின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் இருப்பது போல் இருந்தது. ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
விறுவிப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 85 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ஆகஸ்ட்டு மாதம் படப்பிடிப்பை முழுவதும் முடித்து விடுவதாகவும் படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்