முகப்புகோலிவுட்

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகள்!

  | June 19, 2019 19:17 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

 • இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார்
 • இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்
 • விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார்
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் கூட்டணி ‘தளபதி63'.  இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி இன்னும் பலர் நடித்து வருகிறார்கள். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரஃப் இப்படத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21 அன்று வெளியிட திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com