முகப்புகோலிவுட்

‘தல’ படம் ஹிட்டானதற்கு இயக்குநருக்கு விருந்து கொடுத்த ‘தளபதி’.!

  | July 08, 2020 21:20 IST
Thalapathy Vijay

தளபதிக்கு ஏற்ற ஒரு கதை இருக்கும் போது அவருடன் ஒரு புதிய படத்திற்காக இணைவேன் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

‘தல' அஜித் மற்றும் ‘தளபதி' விஜய் இருவரும் இன்றைய தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள் என்றே சொல்லலாம். இருவருக்குமே கோடிக்கணகான ரசிகர்கள் இருக்கும் நிலையில், சமூக ஊடகங்களில் யார் சிறந்தவர் என்பது குறித்து, ஒவ்வொரு நாளும் இரவு பகல் பாராமல் கருத்துப் போர்கள்  நடந்தவண்ணம் உள்ளன. என்னதான், தொழில்முறை போட்டி இருந்தபோதிலும், விஜய் மற்றும் அஜித் ஒரு நெருக்கமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், சொந்த வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவும், அவர்களது குடும்பங்களும் ஒருவருக்கொருவர் நட்புடனும் இருக்கிறார்கள் என்பது கோலிவுட்டில் இருக்கும் அத்துனை பேருக்கும் தெரியும்.

இயக்குநர் வெங்கட் பிரபு அண்மையில் நடிகர் யுகேந்திரனுடன் உரையாடியபோது, ‘தல' அஜித்துடன் பிளாக்பஸ்டர் ஹிட் ‘மங்காத்தா' படத்தை கொடுத்தபோது, ‘தளபதி' விஜய் அந்த படத்தைப் பார்த்து மிகவும் விரும்பியதாகவும், அவர் வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து அவருக்கு ஒரு அருமையான உணவுடன் உபசரித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்கு ஒரு கதையை விவரிக்க எந்த நேரத்திலும் வரவேற்கப்படுவதாகவும் கூறியுள்ளார் விஜய். தளபதிக்கு ஏற்ற ஒரு கதை இருக்கும் போது அவருடன் ஒரு புதிய படத்திற்காக இணைவேன் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு தற்போது சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கும் ‘மாநாடு' படத்தை இயக்கிவருகிறார். அதேபோல், விஜய் தனது ‘மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இப்படம் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்போது வெளியாக தயாராக இருக்கிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com