முகப்புகோலிவுட்

விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால்? – விஜய்க்கு வந்த அடுத்த சோதனை!

  | October 21, 2019 17:40 IST
Bigil

துனுக்குகள்

 • பிகில் படத்திற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது
 • பூ தொழிலாளர்கள் தற்போது விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
 • சமீபத்தில் கறிக்கடை தொழிலாளர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்
 
பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு இன்றுவரை சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. நடிகர் விஜய் தங்களை மரியாதைக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பூ தொழிலாளர்கள் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
பிகில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் விஜய் ரசிகர்களுக்கு குட்டிக் கதை ஒன்றை கூறினார். அதில் பூக்கடையில் வேலை பார்ப்பவனை வெடிக்கடையில் வேலைக்கு பார்த்தால் தண்ணீர் தெளித்து வியாபாரத்தைக் கெடுத்து விடுவான் என்று கூறினார். மேலும் யாரை எங்கு அமர்த்த வேண்டுமோ அங்கே அமர்த்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது சமீப கால அரசியல் சூழ்நிலை குறித்து விஜய் பேசிய கருத்தாக இருந்தது. 
 
3o21c388

 
அவர் பேசியது சுபஸ்ரீயின் மரணம் குறித்து அவர் கூறிய விளக்கமாகவும் இருந்தது இதற்கு ஆளும் கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. இதனை அடுத்து தற்போது பூ தொழிலாளர்களையும் மரியாதைக்குறைவாக, அவன், இவன் என்று பேசியது தங்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக ஸ்ரீரங்கம் அண்ணா பூ தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
மேலும் அவர் பேசும் போது, மாவட்டம் தோறும் சுமார் 1 லட்சம் பூ தொழிலாளர்கள் பூத்தொழில் செய்து வருகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் புனிதமான தொழில் செய்பவர்கள் பூ தொழிலாளர்கள். அவர்களை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதற்காக விஜய் மன்னிப்பு கோரவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
 
‘பிகில்' திரைப்படம் வரும் 25ம் நாள் வெளியாக உள்ள நிலையில் ஏற்கனவே பிகில் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு கறிகதை தொழிலாளர்கள் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் தற்போது பூ தொழிளாளர்கள் இவ்வாறு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com