முகப்புகோலிவுட்

“அரசியலில் புகுந்து விளையாடுங்கள்” விஜய்யின் பேச்சால் ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

  | September 20, 2019 11:58 IST
Vijay

துனுக்குகள்

  • நேற்று சாய்ராம் கல்லூரில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது
  • அரசியலுக்கு வருவதற்கு வித்திடுகிறாரா விஜய் என விமர்சனங்க எழுந்துள்ளது
  • தன் ரசிகர்மீது கை வைக்காதீர்கள் என விஜய் கேட்டுக்கொண்டார்
பிரம்மாண்டமாக நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அசத்தல் பேச்சு அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே சமீபகால அரசியல் நிகழ்வுகளை விலாசி தள்ளியுள்ளார் நடிகர் விஜய், வெகுநாட்களாக பொதுமேடைகளில் அடக்கி வாசித்து வந்த விஜய் சமீப காலங்களில் பொது மேடைகளில் வலுவான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நேற்று நடந்த இசை வெளியீட்டு விழா பெரும் கொண்டாட்டமாக முடிவடைந்தது.
 
சமீபத்தில் பேனர் விழந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பேசிய நடிகர் விஜய், “சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ அதை விட்டுவிட்டு லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் நல்லா இருக்கும். என்னோட போட்டோ பேனரை கிழியுங்கள் ஆனால் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள். வாழ்க்கையும் ஒரு கால்பந்து போட்டிதான் சில சமயம் நம் அருகில் இருப்பவர்களே சேம்சைட் கோல் அடித்து விடுவார்கள். அரசியலில் புகுந்து விளையாடுங்கள் விளையாட்டில் புகுந்து அரசியல் செய்யாதீர்கள். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள்” என்று ரசிகர்களுக்கு அறிவுறித்தினார். சமீப காலமாக பொதுமேடைகளில் அரசியல் கருத்துகளை சூசகமாக உதிர்த்து வரும் நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வித்திடுகிறாரா என்கிற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.
 
தன் ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து ரசிகர்கள் மீது கை ரைவக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ள விஜய் அரசியலில் புகுந்து விளையாடுங்கள் என்று சொன்னது அவர் ரசிகர்களை அரசியலுக்கு வரவைக்கு அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே இந்த நிகழ்ச்சியிலும் விஜய்யின் பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அட்லி இயக்கி இருக்கும் பிகில் படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்