முகப்புகோலிவுட்

விஜய் பேச்சுக்கு அ.தி.மு.க-வின் எதிர்ப்பும்! தி.மு.க-வின் ஆதரவும்!

  | September 20, 2019 16:48 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

 • அதிமுகவை சேர்ந்த வைகை செல்வன் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு
 • திமுகவை சேர்ந்த தங்கத்தமிழ் செல்வன் ஆதரவு தெரிவித்துள்ளார்
 • சுபஸ்ரீ மரணம் குறித்து நேற்று விஜய் பேசியது வைரலாகி இருக்கிறது
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பிகில்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசிய போது யாரை தண்டிக்க வேண்டுமோ அவர்களை தண்டிக்காமல் பேனர் அச்சிட்டவர், லாரி ஓட்டுநரை தண்டிப்பது ஏற்கத்தக்கது அல்ல. யாரை எங்ககு வைக்க வேண்டுமோ அங்கே வைத்தால் எந்த பிரச்னையும் இல்லை என்று சூசகமாக பேசியிருந்தார். தற்போது விஜய்யின் இந்த பேச்சுக்கு அரசியல் ரீதியாக சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அதிமுக அரசை தொடர்ந்து விஜய் தாக்கி பேசி வருவதாக கூறப்படும் நிலையில், இதுபற்றி வைகைச்செல்வன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
திரைப்படங்கள் 20 நாளுக்கு மேல் ஓடுவதே சிரமமாக உள்ளது. திரைப்படங்களை பரபரப்புக்கு உள்ளாக்க அரசியல் தேவைப்படுகிறது. ஒருகாலத்தில் கதையை நம்பி படம் எடுத்ததால் நீண்ட காலம் படம் ஓடியது. ஓராண்டுவரையெல்லாம் ஓடிய வரலாறு உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. கதையே இல்லாத படத்தை எடுத்துவிட்டு 2 மாத காலத்திற்கு ஓட்டுவதற்குதான் இதுபோன்ற விழாக்களில், அரசியல் பேசப்படுகிறது.
 
இப்படி பரபரப்புக்கு உள்ளாக்கி, படத்தை ஓட வைப்பதில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடிகர் விஜய்யும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். இப்படித்தான் சமீபகாலமாக அவரது படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
 
யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே தான் வைக்க வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே தான் அவர்களை தமிழக மக்கள் வைத்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் வரையில், அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம்.
 
அதிமுக அரசு அடுத்தடுத்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து பத்து வருட காலமாக அதிமுக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. பத்து வருடங்களாக விஜய் படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே அவருக்கு எந்த தொல்லையும் தரப்படவில்லை என்பது தானே உண்மை. ஆனால் தனது படங்களை ஓட வைப்பதற்காக இதுபோன்ற விழாக்களில் விஜய் பரபரப்புக்கு பேசி வருகிறார். இவ்வாறு வைகைசெல்வன் தெரிவித்தார்.
 
 
திமுகவை சேர்ந்த கொள்கை பரப்பி செயலாளர் தங்கத் தமிழ் செல்வன் கூறும் போது, விஜய் தனது கருத்தை தைரியமாக பேசியதற்கு வாழ்த்துகள். அவர் உண்மையைதான் சொல்லியிருக்கிறார். அரசு செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கக் கூடிய துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது என்பதற்காக நான் பாராட்டுகிறேன். இவ்வாறு தங்கத்தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com