முகப்புகோலிவுட்

இந்திய அளவில் டிரெண்டாகும் #மண்ணின்மைந்தன்விஜய்

  | August 03, 2019 13:39 IST
Vijay

துனுக்குகள்

  • பிகில் படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது
  • நேர்கொண்ட பார்வை வரும் 8ம் தேதி வெளியாகிறது
  • #மண்ணின்மைந்தன்விஜய் ஹேஷ் டேக் வைரலாகி வருகிறது
Twitter Trends: தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் (Vijay). இவர் தற்போது அட்லி (Atlee) இயக்கி வரும் ‘பிகில்' (Bigil) படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

வருகின்ற தீபாவளி அன்று பிகில் படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படம் படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  அதே சமயம் அஜித் (Ajith) ரசிகர்களும் ‘நேர்கொண்ட பார்வை' (Nerkonda Paarvai) படத்தை அப்டேட்டுகளை வைரலாக்கி வருகிறார்கள். இரண்டு ரசிகர்களும் ட்விட்டரில் போரே நடத்தி வருகிறார்கள்.

இன்று காலை முதல் விஜய் ரசிகர்கள் மண்ணின்மைந்தன் விஜய் என்கிற ஹேஷ் டேக்கை ரீ ட்வீட் செய்து வருகிறார்கள். சுமார் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஹேஷ் டேக்கை ஷேர் செய்து இந்திய அளவில் முதல் இடத்தில் ஹேஷ் டேக் இருக்கிறது. இதற்க எதிராக அஜித் ரசிகர்கள் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பதை பொருத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்